தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையின் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்று அதிரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மூத்த அமைச்சர்கள் முதல் இளம் முகங்கள் வரை அனைவருக்கும் முக்கியத்துவமளிக்கும் வகையில் இந்த இலாகா பங்கீடு அமைந்துள்ளது.
இதில் மிக முக்கிய மாற்றமாக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செங்கோட்டையனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் உயர்கல்வி மற்றும் சுற்றுலா போன்ற முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐடி துறை, போக்குவரத்து, மருத்துவம், சமூக நலத்துறை என மொத்தம் 25 அமைச்சர்களின் முழுமையான இலாகா பட்டியல் வெளியாகி சோசியல் மீடியாவில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
தவெக அமைச்சரவையின் முழு விவரம்
- அமைச்சர் செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
- அமைச்சர் ஸ்ரீநாத் – மீன்வளத்துறை
- அமைச்சர் கமலி – கால்நடைத்துறை
- அமைச்சர் விஜயலட்சுமி – பால்வளத்துறை
- அமைச்சர் ரஞ்சித் குமார் – வனத்துறை
- அமைச்சர் வினோத் – வேளாண் துறை
- அமைச்சர் ராஜிவ் – சுற்றுச்சூழல் துறை
- அமைச்சர் ராஜ்குமார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை
- அமைச்சர் காந்திராஜ் – கூட்டுறவுத்துறை
- அமைச்சர் மதன்ராஜ் – சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை
- அமைச்சர் ஜெகதீஷ்வரி – சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாடு
- காங்கிரஸ் அமைச்சர் கிள்ளியூர் ராஜேஷ்குமார் – சுற்றுலாத்துறை
- அமைச்சர் விஜய் பாலாஜி – கைத்தறித்துறை
- அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை
- அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்து துறை
- அமைச்சர் ரமேஷ் – அறநிலையத்துறை
- காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் – உயர்கல்வித்துறை
- அமைச்சர் குமார் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
- அமைச்சர் தென்னரசு – வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்
- அமைச்சர் சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
- அமைச்சர் முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
- அமைச்சர் சரத்குமார் – மனிதவள மேலாண்மைத்துறை
- அமைச்சர் விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
- அமைச்சர் மரிய வில்சன் – நிதித்துறை
- அமைச்சர் அருண்ராஜ் – மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை
