ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தன் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
பின்னர் புதிய பிரதமராகச் சனே டகாய்ச்சி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார். ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் சனே டகாய்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா-ஜப்பான் உறவு அவசியம் எனவும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
