ரஷிய அரசுத் தலைவர் புதினின் சீனப் பயணம் நிறைவு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 20ஆம் நாளிரவு, பெய்ஜிங் மாநகரில், ரஷிய அரசுத் தலைவர் புதினுக்கு தேநீர் விருந்து அளித்தார்.

அப்போது பேசிய அவர்,

இன்று, நாங்கள் இருவரும் சீனாவுக்கும் ரஷியாவுக்குமிடையில் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை முன்னெடுத்துவது குறித்து கலந்துபேசி புதிய முக்கிய ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளோம். இரு தரப்புகளும் இணைந்து இடைவிடா முயற்சிகளுடன், சீன-ரஷிய உறவை உயர் தரமுள்ள வளரச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்றார்.

புதின் கூறுகையில்,

இப்பயணம், பல பயனுள்ள சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனத் தரப்புடன் இணைந்து  இரு தரப்பு உறவை விரிவாக்குவோம். ரஷிய-சீன உறவின் உறுதி மற்றும் நிதானத் தன்மை, உலகின் அமைதிக்கும் செழுமைக்கும் புதிய பங்காற்றும் என்றார்.

இதே நாளிரவு, புதின் சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு ரஷியாவுக்குத் திரும்பினார்.

You May Also Like

More From Author