செர்பியாவில் சீன ஆவணத் திரைப்படங்களின் வெளியீட்டு நிகழ்ச்சி துவக்கம்

Estimated read time 1 min read

செர்பியா அரசுத் தலைவர் வுச்சிச் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, செர்பியாவில் சீன ஆவணத் திரைப்படங்களின் வெளியீட்டு நிகழ்ச்சி அந்நாட்டின் தலைநகரான பெல்கிரேட்டில் மே 20ஆம் நாள் துவங்கியது. அதில் சீனப் பரப்புரை துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷேன்ஹய்சிவுங் எழுத்து மூல உரையை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், இரு நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டலில், புதிய யுகத்தில் சீன-செர்பியா பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானம் ஆழமாகவும் பயனுள்ளதாகவும் வளர்ந்துள்ளது. மானிட பண்பாட்டியல் பரிமாற்றமும் தொடர்ச்சியாகப் புத்துயிர் வழங்கியுள்ளது. சீன ஊடகக் குழுமம் செர்பியாவின் ஊடகங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நண்பர்களுடன் இணைந்து ஒத்துழைப்பை ஆழமாக்கி இரு நாடுகளின் வளர்ச்சி ஆற்றலையும், நாகரிக சிறப்பையும் வெளிகாட்ட விரும்புகிறது என்றும், புதிய யுகத்தில் சீன-செர்பிய பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்துக்குப் பங்காற்ற விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author