பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு கட்டுப்பாடு இல்லை: வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி  

Estimated read time 0 min read

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்திற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் விநியோகச் சங்கிலியில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் இந்தியப் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகப் பொதுமக்கள் மத்தியில் சில கவலைகள் எழுந்தன.
இந்நிலையில், உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான அளவிற்குப் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு தாராளமாக உள்ளதாக மத்திய அரசு தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது.

You May Also Like

More From Author