சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 28ம் நாள் மாலை பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில், ரஷிய கூட்டாட்சி பாதுகாப்பு கூட்டத்தின் செயலாளர் ஷோயிக்குவைச் சந்தித்துரையாடினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் ரஷியாவும் பல்நிலையிலான நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி, புத்தினுடன் எட்டியுள்ள பொது கருத்துகளை பன்முகங்களிலும் செயல்படுத்த வேண்டும். நிரந்தர அண்டை நட்பு, பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது ஆகியவை கொண்ட புதிய காலத்தின் சீன-ரஷிய உறவின் எழுச்சியை இரு தரப்பும் வெளிக்கொணர வேண்டும்.
நெடுநோக்கு மற்றும் பயன் தரும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழமாக்கி, இரு நாடுகளின் கூட்டு வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும். மேலும், சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் இரு தரப்பின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பிரிக்ஸ் நாடுகள் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பங்கை ஆற்றி, உலகில் வளரும் நாடுகளின் ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.