அருமண் ஏற்றுமதியை சீனா தொடர்ந்து தடுத்தால், அமெரிக்கா, சீனாவின் மீது சுங்க வரியை அதிகரிக்கக் கூடும் என்று அமெரிக்க நிதித் துறை அமைச்சர் பெசன்ட் நவம்பர் 2ம் நாள் தெரிவித்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் அம்மையார் கூறுகையில், சீனாவின் அருமண் ஏற்றுமதி தொடர்பான கட்டுப்பாட்டுக் கொள்கை குறித்து, சீனா பல முறை நிலைப்பாட்டை விவரித்துள்ளது. பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு, இப்பிரச்சினை தீர்வுக்கான சரியான வழிமுறையாகும். அச்சுறுத்தல் மற்றும் நிர்பந்தத்தை திணிப்பது, பிரச்சினை தீர்வுக்குத் துணை புரியாது. சீனாவும், அமெரிக்காவும், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஃபுசனில் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது. நடைமுறை மூலம், இரு நாட்டு வர்த்தக ஒத்துழைப்புக்கும், உலக பொருளாதாரத்துக்கு மேலதிக நிலைத்தன்மையை ஊட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
சீன-அமெரிக்கத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்த வேண்டும்:சீனா
You May Also Like
சீனாவில் வரி விதிப்புக்கான 28 மேம்பாட்டு நடவடிக்கைகள்
September 6, 2023
2025 நோபல் பரிசு பெற்ற ஓமர் யாகியின் சிறப்பு பேட்டி
July 18, 2026
2026 APEC உச்சிமாநாடு நடத்தல் குறித்து செய்தியாளருக்குப் பதிலளிப்பு
November 17, 2024
