2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு பற்றி சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகஸ்டு 28ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது.
இதில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இதுவரை, சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பெருந்தரவு ஒத்துழைப்பு மையம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகளைச் சேர்ந்த 830க்கும் மேலான எண்ணியல் தொழில் நுட்பத் திறமைசாலிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளது.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குள் 1000 பேருக்கு பயிற்சி அளித்தல் என்ற இலக்கு முன்கூட்டியே நிறைவேற்றப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான எண்ணியல் துறை ஒத்துழைப்பு ஆழமாகி வருகிறது. சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பெருந்தரவு ஒத்துழைப்பு மையம் 2023ஆம் ஆண்டு மே திங்கள் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியது.
இது, சீனாவும், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளும் எண்ணியல் தொழில் நுட்பத் துறையில் அடிப்படை வசதிக் கட்டுமானம், தொழில் பயிற்சி உள்ளிட்ட ஒத்துழைப்பு மேற்கோள்வதற்கான சர்வதேச பரிமாற்ற மேடையாக திகழ்கிறது.
ஆகஸ்டு 31ஆம் நாள் முதல் செப்டம்பர் 1ஆம் நாள் வரை, 2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் மாநகரில் நடைபெறவுள்ளது.