பெய்ஜிங் சி.பி.டி.மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் ஜுன் 13ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நிறைவடைந்தது.
2000ஆம் ஆண்டில் நிறுவிய இந்த மன்றம், உலகிற்கும் சீனாவுக்கும் இடையேயான உரையாடலில் தலைமை வகிக்கும் விதத்தில் உள்ளது. இவ்வாண்டின் மன்றக் கூட்டத்தில் உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல், வணிகம் மற்றும் கல்வியல் துறைகளின் 6000க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
உலகத்துடனான உரையாடல் மற்றும் கூட்டு வளர்ச்சி என்ற கருப்பொருளில் அவர்கள் ஆழமான முறையில் பரிமாற்றம் மேற்கொண்டு, சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதம் நடத்தினர். இதில், சீன வளர்ச்சி வாய்ப்பை கூட்டாக பகிர்ந்து கொள்வது என்பது பல்வேறு தரப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது.
சீனப் பொருளாதாரம் வலுவான நெகிழ்வான தன்மையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், புதிய வளர்ச்சி உள்ளார்ந்த ஆற்றலையும் கொண்டுள்ளது என்று பல விருந்தினர்கள் மன்றக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, சீன அரசு புதிய தரமான உற்பத்தித்திறனின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவது, சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து வருகின்றது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தவிர, பசுமை என்பது குறித்தும், இந்த மன்றக் கூட்டத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டது. துவக்க விழாவின்போது, தூய்மையான, அழகான மற்றும் தொடரவல்ல உலகத்தை கைகோர்த்து உருவாக்குவோம் என்ற முயற்சி நடவடிக்கையை பல்வேறு பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர்.
இன்று சிக்கலான சர்வதேச சூழ்நிலையை எதிர்கொண்டு, தனது சொந்த விவகாரங்களை கையாள்வதில் சீனா எப்போதும் நன்று செயல்பட்டு வருகின்றது.