எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்  

Estimated read time 1 min read

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய எஸ்பிஐ ஊழியர்கள் கூட்டமைப்பு (AISBISF) அறிவித்திருந்த இந்த இரண்டு நாள் தொடர் போராட்டமானது வங்கி நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளும் எவ்விதத் தடையுமின்றி வழக்கம் போல் இயங்கும் என்று வங்கித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

You May Also Like

More From Author