ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியேன் ஜின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இவ்வமைப்பின் தலைமை செயலாளர் யெர்மெக்பயேவ் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார்.
சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போர் மற்றும் உலகின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவு மற்றும் ஐ.நா நிறுவப்பட்ட 80வது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். மேலும் அவர் கூறுகையில், வரலாற்றை மனதில் பதிந்து வைத்து, வரலாற்றைப் படிப்பினையாகக் கொண்டு, எதிர்காலத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டன. நடைபெறவுள்ள தியேன் ஜின் உச்சிமாநாட்டில், தியேன் ஜின் அறிக்கையும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வரும் 10 ஆண்டுக்கால வளர்ச்சி திட்டமும் வெளியிடப்படும். இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த சீனா, ஆக்கப்பூர்வமாகப் பங்கு ஆற்றி, 100க்கும் மேலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவற்றின் மூலம் எரியாற்றல், காலநிலை மாற்றம், பொது சுகாதாரம், இளைஞர்களின் பரிமாற்றம் உள்ளிட்ட பல துறைகளின் ஒத்துழைப்பு சாதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.