சீன வணிகத் துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரை, சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 20113 ஆகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது 6.8விழுக்காடு அதிகரித்துள்ளது. அவற்றில் உயர் தொழில்நுட்ப துறையில் நடைமுறைக்கு வந்த வெளிநாட்டு முதலீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 20.3விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆய்வு மற்று வடிவமைப்புச் சேவை, கணினி மற்றும் அலுவலக உபகரணங்களின் தயாரிப்புத் துறை, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களின் தயாரிப்புத் துறை ஆகியவற்றில் நடைமுறைக்கு வந்த வெளிநாட்டு முதலீட்டுத் தொகைகள் முறையே 108.4விழுக்காடு, 22.9விழுக்காடு மற்றும் 20.2விழுக்காடு அதிகரித்துள்ளன.
வெளிநாட்டு முதலீட்டைப் ஈர்ப்பதில் சீனாவின் வலுவான நெகழ்வுத் தன்மை மற்றும் நீண்டகால உயிராற்றலை இந்தப் புள்ளிகள் நிரூபித்துள்ளன. சீனாவின் தொழில்துறை மற்றும் புத்தாக்க மேம்பாடு, தரமான வெளிநாட்டு முதலீடு, குறிப்பாக உயர் தொழில்நுட்ப துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குப் பெரிய ஈர்ப்பாற்றலை உருவாக்கியுள்ளது.
