தைவான் பிரதேச வெளிவிவகார அலுவலகத்தின் பொறுப்பாளர் லின் ஜியா லுங், ஜப்பானுக்கு வருகை தருவதற்கு ஜப்பான் அரசு அனுமதி அளித்தது. இது குறித்து, ஜப்பானுக்கான சீனத் தூதரகத்தின் துணை தூதர் ஷி யொங், ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய மற்றும் ஓஷினிய விவகாரப் பிரிவின் தலைவருக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
தைவான் பிரச்சினை, சீனாவின் மைய நலன்களிலுள்ள மையமாகும். ஒரே சீனா கொள்கை என்ற எச்சரிக்கை கோடு, கடந்து செல்லப்படக் கூடாது. இப்பயணத்துக்கு முன், சீனத் தரப்பின் பல முறை பரிமாற்றத்தைப் பொருட்படுத்தாத ஜப்பான் அரசு, லின் ஜியா லுங்கின் பயணத்தைத் தடுக்க வில்லை. இதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என்று ஷி யொங் தெரிவித்தார்.