தொடர்ந்து மேம்பட்டு வரும் சீனாவின் முதலீட்டு அமைப்பு

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, புதிய உயர்தர உற்பத்தி ஆற்றல் தொடர்பான நாட்டின் முதலீடுகள், இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து காணப்பட்ட சிறந்த வளர்ச்சி போக்கைப் பேணித்து வருகின்றன.

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, உயர் தொழில்நுட்பத் தொழில்துறைகளின் முதலீடு கடந்த ஆண்டை விட 5.2 சதவீதமும், அறிவுசார் சொத்து சார்ந்த தயாரிப்புகளுக்கான முதலீடு கடந்த ஆண்டை விட 9.2 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் குவான்ஹுவா கூறுகையில், முதல் 8 மாதங்களில் பல துறைகளில் முதலீட்டு வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது என்றார். அறிவியல் புத்தாக்கம், தொழில்துறை மேம்பாடு, அடிப்படை ஆதரவு ஆகியவற்றை நோக்கி முதலீடுகள் மாறியுள்ளன என்றும், உயர்தர வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு தேவையான முதலீட்டு மேம்பாடு இதுவாகும் என்றும் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author