“சீனம் பாலம்” என்னும் சீன மொழித் திறன் போட்டி அண்மையில் இலங்கை, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதிப் போட்டி மே 24ஆம் நாள் இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெற்றது. அந்நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 157 பேர் இதில் பங்கேற்றனர். காலி தெற்கு கல்லூரியைச் சேர்ந்த கலன்சூரியா சாம்பியன் பட்டம் பெற்று, சீனாவில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் போட்டியிடும் தகுதியைப் பெற்றார்.
இலங்கை தலைமையமைச்சரின் செயலாளர் சபுதந்திரி கூறுகையில், மாணவர்கள் சீன மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை நிலைநிறுத்தி, இலங்கை-சீன மக்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புக்குப் பங்காற்ற வேண்டும் என்றார்.
