பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது சிபிஎஸ்இ  

Estimated read time 0 min read

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்குகின்றன.
இந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 46 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10:30 மணிக்குத் தொடங்கும் நிலையில், மாணவர்கள் காலை 10:00 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10:00 மணிக்கு மேல் வரும் மாணவர்கள் கண்டிப்பாகத் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு காலத்தில் முக்கிய தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் நடைபெற உள்ளதால், பல்வேறு நகரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, மாணவர்கள் உள்ளூர் சூழல், வானிலை மற்றும் தூரத்தைக் கணக்கில் கொண்டு வீட்டிலிருந்து சீக்கிரம் கிளம்புமாறு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

More From Author