தொடரும் மழை : பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

இன்று நடைபெற இருந்த திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (டிசம்பர் 18) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

You May Also Like

More From Author