கர்நாடக அரசியலில் மெகா திருப்பம்! நாளை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா?  

Estimated read time 1 min read

கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே புகைந்து கொண்டிருந்த அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
முதலமைச்சர் சித்தராமையா நாளை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், புதிய முதலமைச்சராகத் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்க உள்ளதாகவும் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2023-ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல், சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே முதலமைச்சர் நாற்காலிக்கு கடும் போட்டி நிலவி வந்தது.
அப்போது காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, 5 ஆண்டுகால ஆட்சிக் காலத்தைப் பகிர்ந்து கொள்ளும் ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சித்தராமையாவை முதலமைச்சராக்கியது.
அந்த 3 ஆண்டு காலக்கெடு தற்போது நிறைவடைவதை அடுத்தே இந்த அதிரடி தலைமை மாற்றம் அரங்கேறுகிறது.

You May Also Like

More From Author