தென்னாப்பிரிக்காவின் உள்துறை அமைச்சகம் ஜனவரி 13ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், சீனா மற்றும் இந்தியப் பயணிகள் விசா விண்ணப்பிக்கும் விதிமுறைகளை எளிதாக்குவதற்கான திட்டத்தை தென்னாப்பிரிக்கா வகுத்துள்ளது. 65 சுற்றுப்பயண நிறுவனங்கள் முதல்முறையாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தொடர்புடைய சுற்றுலா நிறுவனங்களுடன் தென்னாப்பிரிக்க அரசு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டு வருகிறது என்றும், இத்திட்டம், தென்னாப்பிரிக்கப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்க விரும்புவதாகவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, அந்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களில், சீன மற்றும் இந்தியப் பயணிகளின் விகிதம் முறையே 1.8 மற்றும் 3.9 விழுக்காடாகும்.