சீனாவின் ஹுபேய் மாகாணத்தை திங்கள்கிழமை மாலை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில், குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 331க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த புயலின் காற்றின் வேகம் மணிக்கு 260 கி.மீ (160 மைல்கள்) வரை எட்டியது.
ஹுவாங்காங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.
அங்கு, 12வது மாடியில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து 30 வயது இளைஞர் ஒருவர் சூறாவளியால் வெளியே இழுக்கப்பட்டார்.
சோபா மற்றும் அலமாரிகள் உள்ளிட்ட அவரது உடைமைகளும் அடித்துச் செல்லப்பட்டன.
அந்த இளைஞர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
சீனாவில் சூறாவளியின் போது 12வது மாடி குடியிருப்பில் இருந்து வெளியே இழுக்கப்பட்ட நபர்
