ஐ.நாவின் உயர் நிலை கூட்டம் மே 26ஆம் நாள் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
ஐ.நா சாசனம் மற்றும் கோட்பாட்டைப் பேணிக்காத்து, ஐ.நாவை மையமாக கொண்ட சர்வதேச கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் தற்போதைய நிலைமை குறித்து எடுத்துக் கூறினார். 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், உயர் நிலை பிரதிநிதிகள் உள்ளிட்ட 100க்கும் மேலான நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கெடுத்தனர்.
அப்போது வாங்யீ கூறுகையில்,
தற்போதைய சர்வதேச நிலைமை, 2ஆவது உலக போருக்குப் பிறகு, மிகவும் சிக்கலான, ஆழ்ந்த மாற்றங்களை எதிர்நோக்குகின்றது. நாம் ஒன்றுபட்டு, ஐ.நாவைப் பேணிக்காத்து, ஐ.நாவுக்கு உயிர் ஆற்றலைக் கொண்டு, ஐ.நாவை வலுப்படுத்த பாடுபட வேண்டும் என்றார்.
புதிய வரலாற்றுத் துவக்கப் புள்ளியில், சீனா மேலதிகமான பொறுப்புகளுக்கு ஏற்று, கடமைகளை நிறைவேற்றி, மேலும் நியாயமான உலக ஆட்சி முறை கட்டமைப்புக் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, மனித குலத்தின் பொது சமூகக் கட்டுமானத்தைக் கூட்டாக முன்னேற்றும் இலக்குகளை எட்ட பல்வேறு நாடுகள் பாடுபட வேண்டும் என்றார்.
