வடக்கு வசிரிஸ்தானில் சமீபத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 13 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியதை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29 ), இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இது தொடர்பான ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையை தாங்கள் பார்த்ததாகவும், குற்றச்சாட்டை உறுதியாக நிராகரித்ததாகவும், அது அடிப்படையற்றது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது.
முன்னதாக, சனிக்கிழமை அன்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் காடி கிராமத்தில், ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது தற்கொலை குண்டுதாரி ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதியதில் இந்த தாக்குதல் நடந்தது.
வசிரிஸ்தான் குண்டுவெடிப்பு; பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா
