பதவியேற்ற பின் முதல்முறை.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் விஜய்  

Estimated read time 0 min read

தமிழகத்தில் புதிய அரசை அமைத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று மாலை டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
மாலை 4:35 மணியளவில் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது.
முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்த சந்திப்பு அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இச்சந்திப்பின் போது தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான மேகதாது அணை விவகாரம் மற்றும் மாநில நலன் சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பிரதமரிடம் முதல்வர் விஜய் நேரில் எடுத்துரைத்ததுடன், இது தொடர்பான கோரிக்கை மனுவையும் அவரிடம் சமர்ப்பித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author