நாசாவின் ஆர்டெமிஸ் IV திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலவின் தென் துருவப் பகுதிக்கு இரண்டு அதிநவீன அறிவியல் கருவிகளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் எதிர்கால ஆய்வுக்கான புரிதலை ஆழப்படுத்த இந்தக் கருவிகள் உதவும்.
நிலவின் சுற்றுச்சூழல் குறித்த முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், DUSTER (தூசி மற்றும் பிளாஸ்மா சூழல் கண்காணிப்பாளர்) மற்றும் SPSS (தென் துருவச் seismic நிலையம்) ஆகிய இரண்டு கருவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சந்திரயான் 3 தரையிறங்கிய நிலவின் தென் துருவத்திற்கு அதிநவீன கருவிகளை அனுப்புகிறது நாசா
