கடந்த ஆண்டு ஜூன் மாதம் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் 787 விமான விபத்து குறித்த இறுதி அறிக்கை, அதற்கான ஓராண்டு காலக்கெடுவைத் தாண்டி தாமதமாக வாய்ப்புள்ளது.
விமானத்தின் என்ஜின்கள் குறித்த முழுமையற்ற பகுப்பாய்வின் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, விசாரணை குறித்து அறிந்த ஒரு வட்டாரம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் குறித்த விசாரணையின் மையமாக, ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட என்ஜின்கள் இருந்து வருகின்றன. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
ஏர் இந்தியா விபத்து குறித்த இறுதி அறிக்கை தாமதமாக வாய்ப்பு
