தமிழ் சினிமா நடிகர் சத்தியேந்திரா காலமானார் 

Estimated read time 1 min read

பிரபல பழம்பெரும் தமிழ் நடிகர் சத்தியேந்திரா உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

‘சத்யா’, ‘மண்வாசனை’ உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துப் புகழ்பெற்ற இவருடைய சொந்த ஊர் பெங்களூரு ஆகும்.

தற்போது இவருடைய உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் தற்காலிகமாக மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author