இந்தியாவில் முதன்முறையாக, வணிக வளாகத்துக்குள் நுழைந்து அதிலிருந்து வெளியே செல்லும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் திட்டம் சென்னை நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முன்னோடியான முயற்சி முதலில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைமுறைக்கு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்(CMRL) செயல்படுத்தும் இந்த திட்டத்தில், 9 மாடிகள் கொண்ட மூன்று வணிக வளாகங்கள் கட்டப்படவுள்ளன.
இதன் மையமாக இரண்டு தளங்கள் கொண்ட புதிய மெட்ரோ நிலையம் அமைக்கப்படவுள்ளது.
குறிப்பாக, 4வது தளத்தில் ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளங்களில் ரயில்கள் இயக்கப்படுவதற்கான பாதைகள் உருவாக்கப்படும்.
மொத்தம் 6.85 லட்சம் சதுர அடியில் விரிந்து காணப்படும் இந்த கட்டுமானம், ஜப்பான் மற்றும் சீனாவின் மெட்ரோ கட்டிட வடிவமைப்புகளிலிருந்து உத்வேகம் பெற்றுள்ளது.
இந்தியாவின் முதல் மெட்ரோ-மால் ஒருங்கிணைந்த நிலையம் – சென்னை திருமங்கலத்தில் விரைவில் ஆரம்பம்
