2025ஆம் ஆண்டு சீனாவின் பசுமை மற்றும் கார்பான் குறைந்த எரியாற்றல் மாற்றப் போக்கு விரைவுபடுத்தப்பட்டுள்ளது. புதைபடிவமற்ற எரியாற்றல் நுகர்வு விகிதமான 20விழுக்காடு எனும் இலக்கு முன்கூட்டியே நிறைவேற்றப்படும். மேலும், பெரிய நீர் மின்னாற்றல் மற்றும் அணு மின்னாற்றல் திட்டங்களின் கட்டுமானம் விரைவுபடுத்தி வருவதோடு, புதிய ரக மின்னாற்றல் அமைப்பு முறையின் கட்டுமானம் நிலைப்புத் தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதைபடிவ எரியாற்றலின் பசுமைப் பயன்பாட்டிலும் புதிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
முழு ஆண்டிலும், புதிதாக அதிகரித்த காற்று மற்றும் ஒளி மின்னாற்றல் உற்பத்தி இயந்திரங்களின் திறன் 37கோடி கிலோவாட்டை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. காற்று மற்றும் ஒளி மின்னாற்றல் உற்பத்தித் திறன் சமூக மின்னாற்றல் பயன்பாட்டில் 22விழுக்காட்டை வகித்துள்ளது. மேலும், நாடளவில் நீர் மூல மின்னாற்றல் உற்பத்தி இயந்திரங்களின் மொத்த திறன் 44கோடி கிலோவாட்டை தாண்டியுள்ளது. 2026ஆம் ஆண்டில் புதிய எரியாற்றலின் விநியோகம் தொடர்ந்து அதிகரிக்கப் போவதாக சீனத் தேசிய எரியாற்றல் பணியகத்தின் தலைவர் வாங்ஹூங்ட்சி தெரிவித்தார்.
