இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

Estimated read time 0 min read

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பாரதிராஜா உயிரிழந்தார். அவருக்கு வயது 84.

வயது மூப்பு மற்றும் கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவரை, மருத்துவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்கும்படி தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் பாரதிராஜாவின் வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்ற முதல்வர் விஜய், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்து அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரதிராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப்பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

You May Also Like

More From Author