இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் சுமார் 50 சதவீத விமானங்கள் தொடர்ச்சியான தொழில்நுட்ப குறைபாடுகளை கொண்டுள்ளதாக மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட 754 விமானங்களில் 377 விமானங்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளுக்காக (Repetitive defects) அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் ஏர் இந்தியா குழுமம் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்களே அதிக எண்ணிக்கையிலான குறைபாடுகளை கொண்டுள்ள நிறுவனங்களாக பட்டியலில் முன்னணியில் உள்ளன.
இந்திய விமான போக்குவரத்து துறையில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் குறித்த முக்கிய தகவல்களை விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் வியாழக்கிழமை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
