சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு பணி முறைமையின் 32ஆவது கூட்டம் நடைபெற்றது

சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்புப் பணி முறைமையின் 32ஆவது கூட்டம், டிசம்பர் 5ஆம் நாள் நடைபெற்றது.

சீன வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த எல்லை மற்றும் கடல் விவகாரப் பிரிவின் தலைவர் ஹோ லியாங், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்காசிய பிரிவின் தலைவர் கௌரங்கலால் தாஸ் ஆகிய இருவரும் இக்கூட்டத்திற்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர்.

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகம், தேசியப் பாதுகாப்பு அமைச்சகம், உள்விவகார அமைச்சகம், குடியேறுவோர் பிரிவு முதலியவற்றின் பிரதிநிதிகளும், இதில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் எல்லைத் தொடர்பாக பிரச்சினைகளில் இருநாடுகளும் எட்டிய தீர்வை இருதரப்பும் நேர்மறையாக மதிப்பிட்டு அது தொடர்புடைய தீர்வுத் திட்டத்தை முழுமையாகவும் பயனுள்ள முறையிலும் தொடர்ந்து செயல்படுத்த ஒப்புக் கொண்டன.

மேலும்,  எல்லை பிரதேசத்தின் நிலைமையைத் தணிவுபடுத்தும் வகையில், மேலதிகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் எட்டப்பட்ட முக்கிய ஒத்தக் கருத்துகளின் அடிப்படையில், இரு தரப்பும் அடுத்த சுற்று இரு தரப்பு எல்லை பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

எல்லை பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை எனும் அமைப்புமுறையின் முக்கிய பங்குகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி, வெளியுறவு மற்றும் இராணுவ வழிமுறைகளிலான தொடர்பை நிலைநிறுத்தி, எல்லை பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்க வேண்டும்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author