11ஆவது சீன-பிரிட்டன் நெடுநோக்குப் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் துவக்கம்

Estimated read time 1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜூன் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கூப்பருடன் இணைந்து 11ஆவது சீன-பிரிட்டன் நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், இவ்வாண்டின் துவக்கத்தில் பிரிட்டன் தலைமை அமைச்சர் ஸ்டார்மர் சீனப் பயணத்தை வெற்றிகரமாக நடத்தினார். நீண்டகால நிதானமான பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை வளர்ப்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் முக்கிய ஒத்த கருத்துக்களை உருவாக்கினர். நாங்கள் பரிமாற்றத்தை மேலும் அதிகரித்து இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நன்கு நடைமுறைப்படுத்த வேண்டும். உயர் நிலைப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி உலகின் அமைதி மற்றும் நிதானத்தையும் செழுமை மற்றும் வளர்ச்சியையும் முன்னேற்றுவதற்கு இரு நாடுகளும் பங்களிப்பை ஆற்ற வேண்டும். பதற்றமான உலகத்துக்கு மேலதிக உறுதித் தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.

You May Also Like

More From Author