சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சிறப்பு விமானத்தின் மூலம், தஜிகிஸ்தானின் தலைநகரான துஷான்பேவைச் சென்றடைந்து, அந்நாட்டு அரசுத் தலைவர் எமோமலி ரஹ்மானின் அழைப்பின் பேரில், தஜிகிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள துவங்கினார். .
முன்னதாக விமான நிலையத்தில் அவர் கூறுகையில், இரு நாட்டு உறவு தொடர்ந்து வேகமாகவும் சீராகவும் வளர்ந்து வருகின்றது. இரு நாட்டு அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் இரு நாடுகள் எப்போதும் ஒன்றையொன்று உறுதியாக ஆதரித்து வருகின்றன.
மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் ஒத்துழைப்பும் சாதனைகளைப் பெற்றுள்ளது. இச்சூழலில் புதிய நிலைமைக்கு ஏற்ப, இரு நாட்டு உறவு வளர்ச்சி குறித்து தஜிகிஸ்தானின் அரசுத் தலைவர் ரஹ்மானுடன் புதிய திட்டங்களையும் புதிய பரவல்களையும் செய்து, இரு நாட்டுப் பன்முக ஒத்துழைப்பை அதிகரித்து அவற்றை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.