சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ அழைப்புக்கிணங்க, 24ஆம் நாள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் லுபியோவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
வாங் யீ கூறுகையில்,
கடந்த வெள்ளிகிழமை சீன-அமெரிக்க இரு நாட்டு அரசுத் தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டு, ஏராளமான ஒத்த கருத்துகளை எட்டியுள்ளனர். இரு நாட்டுறவு வளர்ச்சி முக்கிய கட்டத்தை வரவேற்றுள்ளது. இரு நாட்டு தலைவர்கள், இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு முக்கிய திசையை வழிகாட்டியுள்ளனர். இரு நாட்டு பணிக்குழுக்கள், இரு நாட்டு தலைவர்களின் ஒத்த கருத்துகளை நடைமுறைப்படுத்தி, இரு நாட்டுறவின் நிதானமான ஆரோக்கியமான தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றார்.
பெரிய நாடுகள், சர்வதேச கடமைகளில் சொந்த பொறுப்பை ஏற்று, உலக அமைதியைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை நனவாக்கும் பணியில் பல்வேறு நாடுகளுக்கு உதவி அளிக்க வேண்டும்.
நீங்கள், சொந்த பொறுப்பைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். சீன-அமெரிக்க பொது மக்களின் எதிர்காலத்திற்கும், உலக அமைதி மற்றும் நிதானத்திற்கும் பங்காற்ற வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.