தலைநகரில் கோரம்..!! பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி!

Estimated read time 0 min read

டில்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள உணவகத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

கட்டடத்திற்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவி வருவதால் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இந்த சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 11 பேர் மீட்கப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்திற்கான விசாரணை நடந்து வருகிறது என டில்லி போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது.

You May Also Like

More From Author