சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், அதற்கான ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க விமான நிலைய ஆணையம் தயாராகி வருகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தும் நிலையில், எதிர்கால சூழலைக் கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,600 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க விமான நிலைய ஆணையம் திட்டமிட்டது.
இந்தத் திட்டத்துக்கு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் தவெக தலைவர் ஜோசப் விஜய் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜோசப் விஜய் முதலமைச்சரான நிலையில், பரந்தூர் விமான நிலையத்தின் அவசியம், சர்வதேச விமான சேவை விரிவாக்கம் தொடர்பான ஆய்வறிக்கையை, இந்த மாத இறுதியில் தமிழக அரசிடம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், விமான நிலைய ஆணையமும் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
