“நிர்வாகத்தில் புதிய திருப்பம்!”… 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிடம் மாற்றம்… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!! 

Estimated read time 0 min read

தமிழக அரசு நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாக, இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, போக்குவரத்துத் துறையின் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த ஆர்.லில்லி, தற்போது எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையராகப் பொறுப்பேற்கிறார்.

அதேபோல், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநராக இருந்த ஆர்.சுகுமார், நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாகக் காரணங்களுக்காகவும், அரசுப் பணிகளைச் சீரமைக்கும் நோக்கிலும் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author