பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 800 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 220 புள்ளிகளுக்கு மேல் அதிரடி சரிவு!  

Estimated read time 0 min read

இந்திய பங்குச்சந்தை காரிடாரில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த சுமாரான முன்னேற்றம் இன்று அடியோடு முடக்கப்பட்டு, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை வீழ்ச்சியைச் சந்தித்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டுச் சந்தையின் லாப நோக்கு விற்பனை காரணமாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஒரே நாளில் 800 புள்ளிகளுக்கு மேல் அடியோடு சரிந்துள்ளது.
இந்த சரிவினால், சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனத்தில் இருந்து சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டாளர்களின் பணம் நொடிப் பொழுதில் காற்றில் கரைந்துள்ளது.

You May Also Like

More From Author