வங்காளத்தில் உடைகிறது திரிணாமுல் காங்கிரஸ்? அனைத்து கமிட்டிகளும் அதிரடி கலைப்பு  

Estimated read time 1 min read

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்(TMC) கட்சி வரலாறுகாணாத ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசலையும், அரசியல் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள தங்களின் அனைத்து மட்டத்திலான கட்சி அமைப்புகளையும் மற்றும் முன்னணிப் பிரிவுகளின் கமிட்டிகளையும் உடனடியாகக் கலைப்பதாகத்TMC தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்துத் TMC தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்(X) பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மேற்கு வங்காளத்தில் உள்ள கட்சியின் அனைத்துக் கமிட்டிகளும், அதன் சார்பு அமைப்புகளும் உடனடியாகக் கலைக்கப்படுகின்றன. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் சுயபரிசோதனை, செயல்பாட்டு மறுஆய்வு மற்றும் தகுதி மதிப்பீட்டுப் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், முதன்மைக் கட்சியும் அதன் அனைத்துத் துணை அமைப்புகளும் உரிய நேரத்தில் மாற்றி அமைக்கப்பட்டுப் புதிய அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author