சென்னையில் 44 மின்சார இரயில்கள் இன்று ரத்து!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார இரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம் – சென்ட்ரல் இரயில் நிலையம் இடையே தெற்கு இரயில்வே சார்பில் இன்று பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை,  காஞ்சீபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை இடையே 44 மின்சார இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு இரயில்வே  வெளியிட்டுள்ளது.

இதனிடையே, மின்சார இரயில்கள் ரத்து எதிரொலியாக,  தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே வழக்கத்தைவிட கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என, சென்னை  மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author