சீனத் தேசியளவில் பல பிரதேசங்களில் இருப்புப் பாதைத் திட்டப்பணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இவ்வாண்டின் முற்பாதியில், தேசியளவில் இருப்புப் பாதை துறையில் நிலையான சொத்துக்கான முதலீட்டுத் தொகை 35590 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட 5.5 விழுக்காடு அதிகரித்து, மொத்தமாக புதிதாக 301 கிலோமீட்டர் நீளத்திற்கு இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.
அதே வேளையில், கட்டியமைக்கப்பட்டிருக்கின்ற திட்டப்பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்புடைய வாரியங்கள் இதில் பங்கேற்று, பாதுகாப்பு, தரம், முதலீடு, சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தி, உயர் தர திட்டப்பணிகளை முன்னேற்றியுள்ளன.
தவிரவும் வென்சோ-ஃபூசோ உயர் வேக இருப்புப் பாதை உள்ளிட்ட திட்டப்பணிகளின் முன் ஏற்பாட்டுப் பணிகள் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றங்களைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.