பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Estimated read time 0 min read

பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது…

கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவிக்குச் செல்லும் முக்கிய வழிப்பாதை மூடப்பட்டு, யாரும் உள்ளே செல்லாதவாறு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

More From Author