+2 துணைத் தேர்வு எப்போது? வெளியான அட்டவணை!

Estimated read time 1 min read

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் இந்தாண்டே கல்லூரி சேரும் வகையில் துணைத் தேர்வுகள் நடத்தி முடிவுகள் விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டது.

அதன்படி ஜூன் 25-ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும். அதற்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் துணைத்தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ஜூன் 25ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 25 – தமிழ், ஜூன் 26 – ஆங்கிலம், ஜூன் 27 – கணிதம், விலங்கியல்,வணிகவியல், ஜூன் 28 – கணினி அறிவியல், கணினி பயன்பாடு, வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், ஜூன் 30 – வேதியியல், கணக்கியல், புவியியல், ஜூலை 01 – உயிரியல் , தாவரவியல், வரலாறு, ஜூலை 02 – இயற்பியல் பொருளாதாரம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகிறது.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மே 14-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்கத்தின் சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author