மாநிலங்களவைத் தேர்தல் : பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு..!

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்ததையடுத்து போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி.

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றதால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அந்த மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை ஆளும் தவெக, கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியது. இதன்படி, இந்தப் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் பிரவீண் சக்கரவர்த்தி போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பிரவீண் சக்கரவர்த்தி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து, மொத்தம் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இதில், பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனுவில் மட்டுமே 10 எம்.எல்.ஏ.க்கள் கையொப்பம் இருக்கின்றன. மற்ற 14 சுயேச்சைகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால், இன்று வேட்புமனு ஆய்வின் போது, அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, பிரவீண் சக்ரவர்த்தி போட்டியின்றி மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதாக இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுவார்.

You May Also Like

More From Author