முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர, குஜராத் மாநில அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அமைச்சரவையும், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) திட்டமிடப்பட்டுள்ள விரிவான அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக வியாழக்கிழமை அன்று தங்கள் ராஜினாமாக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலப் பிரிவைப் புதுப்பிப்பதற்கும், வரவிருக்கும் அமைப்பு மற்றும் தேர்தல் சவால்களை எதிர்கொள்வதற்குமான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த அதிரடி நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் பூபேந்திர படேல் வியாழக்கிழமை இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்து, அமைச்சர்களின் ராஜினாமாக்களை முறைப்படி சமர்ப்பிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 16 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை 26 பதவிகளாக விரிவுபடுத்தப்படும் என வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
குஜராத்தில் முதல்வர் தவிர அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா
