நேத்ரா குமணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கணை நேத்ரா குமணன் தகுதி பெற்றதற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழக பாய்மர படகு போட்டியின் வீராங்கணையான நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்.

இவரின் இந்த தகுதித் தேர்வுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் டார்கெட் ஒலிம்பிக் போடிய ஸ்கீம் என்ற திட்டத்தின் மூலம் நேத்ரா திறமையை வளர்த்துக்கொண்டவர் எனவும் அவருக்கு ஒட்டு மொத்த இந்தியர்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author