ஐ.நாவின் நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினத்திற்கு வாங்யீ காணொளி உரை

2026ஆம் ஆண்டுக்கான ஐ.நாவின் நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினமாத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜூன் 8ஆம் நாள், காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.

இதில் வாங்யீ கூறுகையில்,

3 ஆண்டுகளுக்கு முன்பு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலக நாகரிக முன்மொழிவை வழங்கி, வேறுபட்ட நாகரிகங்களுக்கிடையில் நல்லிணக்க வளர்ச்சிக்கு வழிகாட்டினார்.

4 தரப்புகளின் மூலம் நாகரிகப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தலாம் என்று சீனா கருத்து வெளியிட்டது. ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிப்பது, மனித முதன்மையைப் பின்பற்றுவது, பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்தில் ஊன்றி நிற்பது, தொடர்பு மற்றும் கூட்டுப் பகிர்வை நிலைநிறுத்துவது ஆகிய 4 தரப்புகள் இதில் அடக்கம்.

2024ஆம் ஆண்டில்,  சீனா உள்ளிட்ட 83 நாடுகளின் கூட்டு ஆலோசனையை ஒட்டி, ஜூன் 10ஆம் நாள்,  நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினமாக உறுதிப்படுத்தப்படுவது, ஐ.நா பேரவையின் 78ஆவது கூட்டத் தொடரில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

You May Also Like

More From Author