சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கசகஸ்தான் அரசுத் தலைவர் டோகாயேவுடன் பேச்சுவார்த்தை

 

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜூலை 3ஆம் நாள் முற்பகல், கசகஸ்தான் தலைநகர் அஸ்தானாவிலுள்ள அரசு மாளிகையில், அந்நாட்டின் அரசுத் தலைவர் டோகாயேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில்,

அழகான கசகஸ்தானில் பயணம் மேற்கொள்வது மிகவும் மிகழ்ச்சி. கசகஸ்தானின் வளர்ச்சி முன்னேற்றத்தை நேரடியாகக் கண்டுள்ளேன். சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், சீன-கசகஸ்தான் நட்புறவை உறுதியாகப் பேணிக்காத்து, பன்முக ஒத்துழைப்புகளை விரைவுபடுத்தும் மன உறுதி மாறப்போவதில்லை. டோகாயேவுடன் இணைந்து, செழுமையான, உயிர் ஆற்றல் மிகுந்த சீன- கசகஸ்தான் பொது சமூகத்தை கட்டியமைத்து, உலகின் வளர்ச்சிக்கும் நிதானத்திற்கும் மேலும் சரியான ஆற்றலைக் கொண்டு வர விரும்புகின்றேன் என்றார் அவர். 

You May Also Like

More From Author