ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்திலுள்ள மத்திய அரசின் தொடர்பு அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் 15ஆம் நாள் வெளியிட்ட உரையின்படி, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிக்காப்பது, “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்”என்ற கொள்கையின் உச்ச கோட்பாடாகும் என்று வலியுறுத்தினார். சட்டத்தின்படி, நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும் குற்றங்களையும் நடவடிக்கைகளையும் உறுதியாக தடுத்து தண்டிக்க வேண்டும் என்றார்.
ஹாங்காங்கின் சட்ட நீதி நிறுவனம் 15ஆம் நாள், ஜிம்மி லையின் மீதான வெளிபுற சக்தியுடன் இணைந்து செயல்படுதல் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல் குற்றங்களுக்காக இந்த தீர்ப்பு அளித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் செயல்களுக்கு எதிராக சகிப்பு தன்மையுடன் செயல்பட முடியாது என்பதை ஹாங்காங்கின் இத்தீர்ப்பு வெளிகாட்டியுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
