தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) உறுப்பினர்கள் மூவருக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அவர்கள் “2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கும், அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துவதற்கும் சதி செய்ததாக” குறிப்பிட்டுள்ளது நீதிமன்றம்.
நீதிபதிகள் அஜே கட்காரி மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் ராஸி அகமது கான், உனைஸ் உமர் கையாம் படேல் மற்றும் கய்யூம் அப்துல் ஷேக் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்து, அவர்களுக்கு எதிராக முதன்மையான ஆதாரம் இருப்பதாகக் கூறினர்.
PFI 2022இல் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.